பொது இடத்தில் "கசமுசா"! பிளேட்டை மாற்றிய இளம்பெண்ணால் மிரண்டுபோன காவலர்கள்....

பொது இடத்தில் "கசமுசா"! பிளேட்டை மாற்றிய இளம்பெண்ணால் மிரண்டுபோன காவலர்கள்....

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் மற்றும் ஆண் ஒருவர் மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாடுகளையும் தாண்டி செய்த செயல் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஷானன் பேக்கர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்ததுச் செல்லப்பட்டார்.

அவருடன் அவரது ஆண் நண்பர் ஒருவரும் மருத்துவமனைக்கு வந்து இருந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால், முதலில் அவருடன் வந்த ஆண் நண்பரை உள்ளே விடவில்லை. பின்னர் ஷானன் வலியுறுத்தியதால் வேறு வழியின்றி ஆண் நண்பரையும் மருத்துவமனைக்கு உள்ளே அனுப்பி உள்ளனர்.

முதற்கட்ட மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் இருவரையும் ஒரு அறையில் காத்திருக்கச் சொல்லி உள்ளனர். அந்தச் சமயத்தில் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென இருவரும் உல்லாசமாக இருக்கத் தொடங்கி விட்டனர். இதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

இதையடுத்து உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் உடனடியாக அங்கு வந்தாலும் கூட கதவு உள் பக்கம் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அவர்களால் உடனே உள்ளே செல்ல முடியவில்லை..

வெளியே இவ்வளவு நடந்து கொண்டு இருந்த போதிலும் உள்ள அந்த ஜோடி அவர்களின் வேலை கரெக்டாக பார்த்து வந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்றுள்ளனர். அப்போது தான் வெளியே என்ன நடந்தது என்பதே அவர்களுக்குப் புரியத் தொடங்கி உள்ளது.

இதனால் என்ன செய்வதென்று யோசித்த அந்தப் பெண், உடலுறவு வைத்துக் கொண்டதை அப்படியே வலிப்பு வந்ததை போல மாற்றி நடித்துள்ளார்.

இருப்பினும், அங்கிருந்த ஊழியருக்கும் போலீசாருக்கும் அவர்கள் உண்மையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது தெரிந்து இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மருத்துவமனையில் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தப் பெண் நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் எம்மா லெனாண்டன் கூறுகையில், "கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதலில் ஆண் நண்பரை அவர்கள் உள்ளே விடவில்லை. அந்தப் பெண் வற்புறுத்தியதாலேயே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ரூமில் இருந்த இருவரும் திடீரென உடலுறவு கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் மது போதையில் இருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அடித்துக் கொள்ளவும் தொடங்கினர். சரியாக அப்போது போலீசார் வந்துவிட்டனர்" என்றார்.

போலீசார் வந்த போது, வலிப்பு வந்தது போல நடித்த அந்தப் பெண் நீதிமன்றத்தில் தனது தவற்றை ஒப்புக்கொண்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல அதிர்ச்சிகரமான அனுபவங்களைச் சந்தித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த அந்தப் பெண், இனிமேல் மது அருந்த மாட்டேன் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், மருத்துவமனையில் ஒழுங்கீனமாகவும் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, அவருக்கு கடும் தண்டனை விதித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!